தவறான சிகிச்சை முறையால் ஆண் குழந்தை பலி
45 நாட்கள் ஆன ஆண் குழந்தை தவறான சிகிச்சை முறையால் பலி என உறவினர்கள் புகார்;
By : King 24x7 Website
Update: 2023-12-31 05:09 GMT
45 நாட்கள் ஆன ஆண் குழந்தை தவறான சிகிச்சை முறையால் பலி என உறவினர்கள் புகார்
அரக்கோணத்தில் தவறான சிகிச்சை தடுப்பூசியால் குழந்தை இறந்ததாக நகர்ப்புற சுகாதார நிலத்தை சூறையாடிய உறவினர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை விஜயராகவன் தெருவை சேர்ந்தவர் தினேஷ் - சர்மிளா தம்பதிக்கு பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த புதன்கிழமை காச நோய் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதனால் கடந்த 2 நாட்களாக காய்ச்சலில் இருந்த குழந்தை இன்று திடீரென உயிரிழந்தது. குழந்தையை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். குழந்தை இறப்பால் ஆத்திரம் அடைந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு பணியில் இருந்த டாக்டர் விக்னேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தை இறந்த ஆத்திரம் தாங்காமல் அங்கிருந்த டேபிள், 2 மின்விசிறி மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த மருந்து மாத்திரைகளை தரையில் தூக்கி வீசி எறிந்தனர் . டாக்டரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அரக்கோணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.