குடும்ப பிரச்சினை காரணமாக ஆண் தூக்கிட்டு தற்கொலை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-24 15:05 GMT
ஆண் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உஞ்சனை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(40). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் காளியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறாவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்