மணியம்பாடி காப்பு காட்டில் ஆண் சடலம்
மணியம்பாடி பகுதியில் உள்ள காப்பு காட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-26 02:36 GMT
ஆண் சடலம் கண்டெடுப்பு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணியம்பாடி பகுதியில் உள்ள காப்புக்காட்டில் ஆண் பிணம் மரத்தில் இருப்பதாக, தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மதிகோன்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தூக்கில் தொங்கியவர் பென்னாகரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரிந்தது. மூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.