தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு கோடி வரை முறைக்கேடு
முறையான விசாரனை தேவை என வங்கி முற்றுகையிட்ட விவசாயிகள்;
விவசாயிகள் முற்றுகை போராட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுதாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை அருகே உள்ளது கோக்கலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்த கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு தவணைத் தொகை கட்டவில்லை என்று கடிதம் வந்துள்ளது. இது குறித்து வங்கியில் வந்து விசாரித்த போது வங்கி ஊழியர் C.பெரியசாமி என்பவர் விவசாயிகளிடமும் வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ரசீது போட்டுக் கொடுத்து அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் வங்கி சேமிப்பு கணக்கு வங்கி டெபாசிட் கணக்கு வங்கியின் நகைக்கடன் ஆகியவற்றில் சுமார் ஒரு கோடியிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.தொடர்ந்து திருச்செங்கோடு கூட்டுறவு துணை பதிவாளர் இந்திரா விசாரணை மேற்கொண்டார் .
இந்த விசாரணையின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதனை அடுத்து பெரியசாமிசெயலாளர் ஏ. பெரியசாமிஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வங்கிக்கு வந்து கேட்ட வாடிக்கையாளர்களிடம் ஒரு வாரம் கழித்து பதில் கூறுவதாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் தங்களுக்கு வராததால் இன்றுவங்கி வாடிக்கையாளர்களான விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூட்டுறவு துணை பதிவாளர் இந்திரா விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பெரியசாமி தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் டெபாசிட் செய்தவர்களோ வங்கியை நம்பித்தான் பணத்தை டெபாசிட் செய்தோமே தவிர பெரியசாமி என்பவரை நம்பி டெபாசிட் செய்யவில்லை எனவே பணத்திற்கு பொறுப்பேற்று வங்கி பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உயர் அதிகாரி வந்து தக்க பதில் கூறும் வரை நாங்கள் வங்கி வளாகத்தில் அமைதியான முறையில் அமர்ந்துள்ளதாக தெரிவித்தனர். வங்கி முன்பு அமர்ந்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் அருள் அரசு கடன் சங்கத்திற்கு வருகை தந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் குற்றங்கள் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது உடனடியாக பணத்தை திருப்பி தர எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது ஆனால் உங்கள் பணம் நிச்சயமாக திருப்பித் தரப்படும் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்தப் போராட்டம் குறித்துஅந்தப் கோக்கலை ஊராட்சி தலைவர் கந்தசாமி கூறும் போது சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை கையாடல் செய்துவிட்டுமோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தராமல் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் எங்கள் பணத்திற்கு என்ன ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று தெரியவில்லை ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள் ஒரு வாரம் காத்திருந்தும் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை எனவே நாங்கள் அது குறித்து கேட்க இங்கு வந்து அமர்ந்துள்ளோம் என்று கூறினார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.