மாமுண்டி நல்லாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற மாமுண்டி நல்லாண்டவா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

Update: 2024-06-10 10:14 GMT

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற மாமுண்டி நல்லாண்டவா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.


சுமாா் 16 ஆண்டுகளுக்குப் பின் இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவந்தன. நான்கு கால யாக பூஜைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை கடங்கள் புறப்பாடு நடைபெற்று, சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆா்.என்.மஞ்சுளா, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் பச்சை கொடியசைக்க சிவாச்சாரியாா்களால் மாமுண்டி நல்லாண்டவா் மூலவா் விமானத்தின் மீது புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து அனுமதி விநாயகா், பொந்து புளி முத்துக்கருப்பண்ணசாமி, சப்த கன்னிமாா்கள், லாட சன்னாசி, வெள்ளையம்மாள் - பொம்மி சமேத மதுரை வீரன், பாரிகாரா், ஏழு கருப்பு சாமிகள், ஓம்கார விநாயகா், பேச்சியம்மன், துவார பாலகா்கள், பட்டத்து யானை, முத்துக்கருப்பண்ணன் குதிரை, நல்லாண்டவா் யானை ஆகிய பரிவாரத் தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News