பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த நபர் கைது
பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த நபர் கைது. காவல்துறையினர் வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 06:54 GMT
பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த நபர் கைது
புளியம்பட்டி அடித்த சொலவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கும் அதே பகுதியை ராணி என்பவரும் கடந்த 9 ஆண்டுகளாக திருமணத்தை தாண்டி தகாத உறவு இருந்து வந்துள்ளது. சமீப காலமாக ராணி ராஜனுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜன் ராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் ராஜா அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்த ராணி தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து புளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜனை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.