விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

அரும்பாவூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-29 03:00 GMT

கைது செய்யப்பட்ட ரெங்கராஜ்

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே - 28ம் தேதி மாலை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட அரும்பாவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லாயி தழுதாழை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர்.

தப்பி ஓடிய நபர்களில் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலத்தை சேர்ந்த தங்கராசு மகன் ரெங்கராஜ் வயது - 24, என்பதும் மேலும் தப்பியோடியது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பெரியம்மாபாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த குணா மகன் ரஞ்சித் வயது 19 , என்பதும் அவர்கள் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 1200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் அதனை பள்ளி சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்த நிலையில் எதிரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து கவரில் சுற்றப்பட்டிருந்த 1200 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும். என மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News