சமூக வலைதளத்தில் பரவிய போலியான செய்தி

குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் (What's APP) போலியான செய்திகளை பதிவிட்ட நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் உட்படுத்தினர்.

Update: 2024-03-05 04:53 GMT

கைது

குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் (What's APP) போலியான செய்திகளை பதிவிட்ட நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் உட்படுத்தினர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் ஒட்டன்சத்திரம் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் வாட்ஸ் அப்பில் போலியான செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் போலியான செய்தியை பரப்பியது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வடிவேல் முருகன்(30) , என தெரியவந்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் வடிவேல் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News