கள்ள சந்தையில் மது விற்பனை செய்த நபர் கைது
திருவாரூரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-12 13:29 GMT
மது விற்பனை செய்தவர் கைது
திருவாரூர் உட்கோட்டம் வடபாதிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாவூர் அரசு மதுபான கடை அருகில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகா தென்மதூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 180 எம்எல் பிராந்தி 83 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.