ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது
ஆலிவலம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது. மேலும் அவரிடம் இருந்து செல்போன் ஒன்று மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 04:52 GMT
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது
ஆலிவளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தம்பாடி கடைத்தெரு பேருந்து நிறுத்தம் அருகில் நின்று ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தியாகசுந்தரம் என்பவரின் மகன் வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து செல்போன் ஒன்று மற்றும் பணம் ரூபாய் 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்டு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த ஆலிவளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புஷ்பராஜ் மற்றும் காவலர்களை எஸ்பி பாராட்டினார்.