ஆம்பூர் அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது!

ஆம்பூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது;' 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-12-06 10:19 GMT

ஆம்பூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது;' 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது; அவரிடம் இருந்து 8 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா பறிமுதல்.

மேலும் 2 பேர் தப்பியோட்டம் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து மூன்று வடமாநில இளைஞர்கள் மூன்று பைகளில் கஞ்சா கடத்தி கொண்டு ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர், பின்னர் வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துளளனர், அப்பொழுது பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அரசு பேருந்து நடத்துனர் வடமாநில இளைஞர்கள் வைத்திருந்த பைகள் குறித்து கேட்டபோது அந்த இளைஞர்கள் அரசு பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர், இந்நிலையில் அதே பேருந்தில் பயணம் செய்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ராஜேஷ் என்பவர் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்க்கொண்ட போது இரண்டு வடமாநில இளைஞர்கள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த காவலர் மற்றும் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்த மற்றொரு இளைஞரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது, மேலும் அந்த இளைஞரிடம் காவலர் விசாரணை மேற்க்கொண்ட போது, அந்த இளைஞர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அன்வர் என்பதும், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து, அதன் பின்னர் வேலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு பேருந்து மூலம் சேலம் நோக்கி கஞ்சாவை எடுத்துச்சென்றது தெரியவந்தது, பின்னர் அன்வர் மற்றும் அவர் வைத்திருந்த கஞ்சா பண்டல்களை அரசு பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த காவலர் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர், இதனை தொடர்ந்து அன்வர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் வைத்திருந்த 8 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா பையை பறிமுதல் செய்து அன்வரை சிறையில் அடைத்தனர்.. மேலும் தப்பியோடிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 



Tags:    

Similar News