பூண்டி அருகே பெண்ணிடம் 7 சவரன் செயின் பறித்தவர் கைது
பூண்டி அருகே பெண்ணிடம் 7 சவரன் செயின் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-18 16:37 GMT
கோப்பு படம்
பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு மனைவி லாவண்யா, 30. இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம், 18ம் தேதி மாலை கால்நடைகளை மேய்ச்சலுக்காக பூண்டி நெடுஞ்சாலை வழியாக ஓட்டி சென்றார்.
அப்போது அவ்வழியாக, 'யமாஹா டியூக்' பைக்கில் வந்த இருவர் லாவண்யாவிடம்y பூண்டி செல்ல வழி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் இருந்த, 7 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு சென்றனர். இதுகுறித்து லாவண்யா அளித்த புகார்படி கனகம்மாசத்திரம் போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.
நேற்று இதுதொடர்பான வழக்கில் உத்திரமேரூர் தாலுகா சீத்தனஞ்சேரி அடுத்த குருமனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், 21 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.