ஜெயங்கொண்டம் அருகே மூக்கில் சாவியால் குத்தியவர் கைது.

ஜெயங்கொண்டம் அருகே முன் விரோதத்தில் மூக்கில் சாவியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-01 03:13 GMT

காவல் நிலையம் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவராஜ் மகன் ரவி (50).என்பவரின் குடும்பத்திற்கும் அதே பகுதி அதே தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் வல்லரசு குடும்பத்திற்கும் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவி மற்றும் அவரது மனைவி  ஜெயங்கொண்டம் வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தனியார் திருமணம் மண்டபம் அருகே வந்தபோது  வல்லரசு ரவியை இடையில் வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கையில் வைத்திருந்த சாவியால் மூக்கில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சையில் இருந்தவாறு ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ரவி புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வல்லரசுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News