கருத்து வேறுபாட்டால் கணவன் தற்கொலை

தேனி மாவட்டம்,பாலர்பட்டியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-28 08:39 GMT
தற்கொலை

தேனி மாவட்டம், போடி அருகே பாலர் பட்டியைச் சேர்ந்தவர் பிரபு இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு ஒப்பிட்டார் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று 11 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News