மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம், களர்பட்டி பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-17 10:32 GMT
தற்கொலை
இலுப்பூர் அருகே உள்ள களர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவருக்கும் ராஜாளிப்பட்டியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சுரேசுக்கும் அவரது மனைவி சத்யாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் களர்பட்டி பகுதியிலுள்ள சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இலுப்பூர் போலிசார் வழக்குப்பதிவு செய்தை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.