மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதால் சோகம்
தேனி மாவட்டம்,பழனிசெட்டிபட்டி பகுதியில் மன அழுத்தம் காரணாமாக அதிக அளவில் மாத்திரை உட்கொண்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-15 02:32 GMT
தற்கொலை
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி, அரசநகர் பகுதியில் சேர்ந்தவர் வனிதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தலைவலி மற்றும் மன அழுத்தம் காரணமாக மாத்திரைகள் உண்டு வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி அதிக அளவில் மாத்திரைகள் உட்கொண்டு மயங்கி விழுந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 12ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி வனிதா உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளி செட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.