கொத்தனார் தற்கொலை
கொல்லங்கோடு அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-17 03:19 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மணலி வாழவிளை பகுதியை சேர்ந்தவர் பிஜு பிஜூ. கொத்தனார். அதிக மான மது பழக்கம் உள்ளவர். மாலை வீட்டிலிருந்த பிஜு அறையில் விஷ வாடையுடன் வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த மனைவி சோபிகா,உறவினர்கள் உதவியுடன் களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவம்னையில் பிஜூவை சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை பிஜூ பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.