மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது - வாகனம் பறிமுதல்

தலைவாசல் அருகே சுவேத நதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Update: 2024-01-25 06:36 GMT
காவல் நிலையம் 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே சுவேத நதியில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனபேரில், நேற்று அதிகாலை 5 மணியளவில் மண்டல துணை தாசில்தார் ஜோதி, வீரகனூர் ஆர்ஐ ஜெயா, விஏஓ பிருந்தா உள்ளிட்டோர் கவர்பனை பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, பிக்அப்வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்து, வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், எஸ்ஐ சிவகுருநாதன் மற்றும் போலீசார், பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் நடுவலூர் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் கார்த்தி(31) என்பது தெரியவந்தது. டிரைவரான அவரை கைது செய்த போலீசார், பிக்அப்வேனை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்களை தேடி வரு கின்றனர்.
Tags:    

Similar News