மனைவியை பிரிந்து வாழ்ந்த பெயிண்டர் மர்ம சாவு
விழுப்புரம் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-08 11:29 GMT
மர்ம மரணம்
புதுச்சேரி திப்பராயப் பேட்டை லசார் கோவில் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகீம் (வயது 63). பெயிண்டர். இவருக்குஷகிலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மனைவியை பிரிந்து அப்துல் ரகீம், கடந்த 4 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் அராபத் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது நடமாட்டம் இல்லை.
இதையடுத்து தம்பி அப்துல் வகாப்,அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மூக்கு, வாய் மற்றும் காதில் ரத்தம் கசிந்து பிணமாக கிடந்தார். அவரது மர்மசாவு குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.