ரயிலில் கஞ்சா ஆயில் கடத்தியவர் கைது

சேலம் வழியாக சென்ற ரெயிலில் ரூ. 2 கோடி கஞ்சா ஆயில் கடத்திய ரெயில்வே ஒப்பந்த பணியாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-15 14:06 GMT

கஞ்சா கடத்தியவர் கைது

ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வரும் நபர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் டாட்டாநகர் - எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சேலம் வந்த அந்த ரெயிலில் சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதிப்பு ரூ.2 கோடியாகும். இதை ஏ.சி பெட்டியில் பணி புரியும் உதவி பணியாளர் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக்செட்டி (31) என்பதும், ஏ.சி பெட்டியில் பெட்ஷீ ட் , தலையணை வழங்கும் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர் கஞ்சா ஆயில் பந்தை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தார். இவருக்கு இதை யார் வழங்கினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News