புகையிலைப் பொருட்கள் விற்ற ஒருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் புகையிலை பொருட்கள் விற்ற ஒருவரை கைது செய்த போலீசார் அவரது கடைக்கு சீல் வைத்தனர்.
Update: 2024-02-11 12:31 GMT
மண்டையூர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன் பெயரில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மண்டையூர் மளிகை கடை நடத்தி வரும் அதை ஊரை சேர்ந்த பாலாமணி என்பவர் அவரது கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரது கடைக்கு சீல் வைத்தனர்.