கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம்

Update: 2023-11-13 04:57 GMT
உற்சவம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி புண்டரகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.பெருமாள் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து கோவில் உட்பிரகாரம் வலம் சென்று மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். மணவாள மாமுனிகள் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து 10 நாட்களுக்கு வரும் 16ம் தேதி வரை-க்கும் உற்சவத்தில் பெருமாள், தாயாருக்கு சாற்றுமுறை, சேவை, ஆராதனம் நடத்தி, விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் ஜெபித்து, உபசார பூஜைகளுடன் மண்டபகபடி செய்து வைக்கப்படுகிறது. இன்று காலை 6:00 மணி முதல் மாலை 3:30 வரை கேதார கவுரி விரதம் நடக்கிறது. தேசிக பட்டர் வழிபாடுகளை செய்து வைக்கிறார்.
Tags:    

Similar News