கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகம்

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த மண்டல அபிஷேக நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-10 08:44 GMT

சிறப்பு வழிபாடு 

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாள் நடந்த மண்டலாபிஷேக விழா நிறைவு பூஜை நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த பிப்., 21ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து கோவிலில் தினமும் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக விழா துவங்கியது.

நேற்று முன்தினம் மண்டலாபிஷேகம் நிறைவு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோ பூஜை, யாகசாலை வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து 27 நட்சத்திரம் 12 ராசி, நவகிரகத்திற்கு மகா சங்கல்பம் செய்தனர். மூலவருக்கு 108 சங்காபிஷேகம், ராஜ விநாயகர், நவகிரகம், சத்தானகிருஷ்ணன், சீதாராமன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சரஸ்வதி, காமதேனு, குபேர அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது.

கோவில் விழாக்களை 48 பேர் கொண்ட அந்தணர் குழுக்கள் செய்தனர். சின்னசேலம் ஆரிய வைசியர்கள், நிர்வாக தலைவர் ரவீந்திரன், கமிட்டி தலைவர் அரவிந்தன் மற்றும் கோவில் நிர்வாகிகள் மனோகரன், ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News