மணம்பூண்டி பாலமணிகண்ட சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா
கடந்த 18ம் தேதி தொடங்கிய மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சாற்றப்பட்டது
Update: 2023-12-25 07:14 GMT
திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி பாலமணிகண்ட சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 10:00 மணிக்கு தென்பெண்ணையில் இருந்து கலசம் புறப்பாடாகியது. அதனைMandal Pooja Ceremony at Mahamboondi Balamanikanda Swamy Temple தொடந்து கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், துர்கா ஹோமம், மகா சாஸ்தா ஹோமம், ஐயப்பன் மற்றும் விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வினியோகிக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மூலவருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாண வேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நடந்தது.