மண்டல பூஜை நிறைவு விழா

ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் 23ம் ஆண்டு மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, யாழி பூஜை விழா விமரிசையாக நடந்தது.

Update: 2023-12-28 07:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் 23 ஆம் ஆண்டு 41 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு யாழி பூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது.இந்த ஐயப்பன் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சபரிமலை சென்று வருவது வழக்கம்.இந்த ஆண்டும் இக்கோயிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை சென்று வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல பூஜை தொடங்கிய நிலையில் 41 வது நாள் மண்டல பூஜையின் நிறைவு நாளான இன்று அக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விழாக்கள் நடத்தப்பட்டு 18 படிகளும் பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட ஓம் என்று எழுதப்பட்ட யாழி பூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களின் கர கோசத்துடன் யாழி மேல்நோக்கி எழும்ப அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று ஒருசேர பக்தி பரவசத்தோடு ஐயப்பனை பிராத்தித்தனர்.

இதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சாமிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்வும் சிறப்பு நெய் அபிஷேகமும் தீபாதாரணை காட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை பக்தி பரவசத்தோடு வழிபட்டுச் சென்றனர்.இதுபோன்று ஆண்டுதோறும் யாழி பூஜை நடத்துவதன் மூலம் பக்தர்களின் நேற்றி கடன் நிறைவேறுவதோடு நோய்நொடியின்றி மக்கள் வாழ்வார்கள் என்றும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News