மங்களூரூ- ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

மங்களூரூ- ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-21 04:26 GMT

பைல் படம்

மங்களூரூ சென்டிரலில் இருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மங்களூரூ - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரெயில் (06090) நாளை (வெள்ளிக்கிழமை) மங்களூரூவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு கண்ணூர், கோழிக்கோடு, சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நள்ளிரவு 1.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், ஆக்ரா கன்டோன்மெண்ட் வழியாக 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News