சீசன் தொடங்கி வரத்து அதிகரிப்பால் மாங்காய் விலை சரிவு

சீசன் தொடங்கி வரத்து அதிகரிப்பால் மாங்காய் விலை சரிந்துள்ளது.

Update: 2023-12-13 15:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சீசன் தொடங்கி தற்போது வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக மாங்காய் விலை குறைந்து வருகிறது. தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோல் இங்கு மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று வெளியூர்களில், விற்பனை செய்து வருகின்றனர்.

திருச்சி, செம்போடை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சீசன் தொடங்கி மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

ரூபாய் 120க்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமாங்காய் ரூபாய் 60 க்கும், ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்ட நீளமாங்காய் ரூ.40 முதல் 50க்கும் விற்பனையாகிறது. மழை, பனி காரணமாக மாங்காய் கறுத்து காணப்படுகிறது

Tags:    

Similar News