மணிமுக்கதா அணையில் மீன் விற்பனை தொடக்கம்

மணிமுக்தா அணையில் விற்பனை செய்யப்படும் மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Update: 2024-02-22 05:52 GMT

மீன் விற்பனை 

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. மழைக்காலங்களில் அணையில் தேங்கும் தண்ணீரில், குத்தகைதாரர்கள் மூலம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு, நன்கு வளர்ந்ததும் மீன்களை பிடித்து விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் சுமார் 10 லட்சம் மீன்குஞ்சுகள் அணையில் விடப்பட்டது. மீன்கள் தற்போது நன்கு வளர்ந்த நிலையில்அவற்றின் விற்பனை நேற்று துவங்கியது. விரால், ரோகு, கண்ணாடி கெண்டை உள்ளிட்ட ரக மீன்கள் ஒரு கிலோ ரூ.150க்கும், ஜிலேபி ரக மீன் கிலோ ரூ.100க்கும், இறால் ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன்கள் உயிருடன் கிடைப்பதாலும், ஏரி மீன்களை விட சுவை அதிகமாக இருப்பதாலும் மணிமுக்தா அணையில் விற்பனை செய்யப்படும் மீன்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

Tags:    

Similar News