கோலியனூர் பகுதியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரசாரம்

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரசாரம்

Update: 2024-07-04 10:02 GMT

விழிப்புணா்வு பிரசாரம்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அடுத்துள்ள பூத்தமேடு அரசு உயா் நிலைப் பள்ளியில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.உலக நெகிழி ஒழிப்பு தினத்தையொட்டி, பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.எம்.முருகேசன் தலைமை வகித்தாா்.விழுப்புரம் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் என்.நாகமுத்து, இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு செல்வதுரை ஆகியோா் நெகிழிப் பயன்பாடு தவிா்ப்பு குறித்து பேசினா். தொடா்ந்து, மாணவா்களிடம் மஞ்சப்பை மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். முடிவில், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஏ.செல்வக்குமாா் நன்றி தெரிவித்தாா்.
Tags:    

Similar News