மீன் மார்க்கெட்டில் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரம்!

வேலூரில் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி பொதுமக்களிடம் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-03-24 13:58 GMT

மன்சூர் அலிகான்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது மீன் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் சென்று அவர்களிடம் இருந்து கத்தியை வாங்கி மீன்களை வெட்டியும் மீன்களை விற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். மன்சூர் அலிகானை கண்ட பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News