மதுரையில் மார்கழி பாவை விழா டிச.17ல் துவக்கம்
மதுரையில் திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் 70வது ஆண்டு மார்கழி பாவை விழா டிச.17 ல் துவங்குகிறது.இவ்விழாவையொட்டி டிச.16 ல் காலை 5:00 மணிக்கு அம்மன் சன்னதி சிருங்கேரி சங்கர மடத்தில், மகா கணபதி ஹோமம், ருத்ரம் சுமங்கலி பூஜை, நவக்கிரஹ ஹோமம் நடைபெறும். டிச.17 மாலை 6:00 மணிக்கு மேலமாசிவீதி மதனகோபால சுவாமிகோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெறும்.அன்று முதல் 2024, ஜன.14 வரை தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்காடிவீதியில் காலை 6:00 மணிக்கு ஆடிவீதியில் வலம் வருதல், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பெண்கள் பங்கேற்கும் பாவைப்பாடல், பக்தி பாடல், கூட்டு வழிபாடு நடைபெறும்.டிச.29 ல் மதியம் 3:00 மணிக்கு வடக்கு மாசிவீதி தருமபுர ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் அனைத்து மாதர், ஆடவர் பஜனை குழுக்கள் பங்கேற்கும் அஷ்டபஜனை திவ்யநாமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
டிச. 30 காலை 9:00 மணிக்கு இதே மண்டபத்தில் மீனாட்சி, ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஜன.15 மாலை 6:00 மணிக்கு மதனகோபால சுவாமி கோயிலில் தைமாத பிறப்பையொட்டி திருவிளக்கு வழிபாடு,70வது ஆண்டு பாவை விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.அமைப்பின் தலைவி விசாலாட்சி கூறுகையில், ''பாவை விழாவின் வரும் 71 ம் ஆண்டையொட்டி 2024 டிசம்பரில் மதுரை காந்தி மியூசியத்தில் 7108 திருவிளக்கு வழிபாடு நடக்க உள்ளது'' என்றார். தொடர்புக்கு: 94424 62850.