அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாத நிறைவு பூஜை
சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாத நிறைவு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-15 07:49 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவயிலில் இந்த ஆண்டு மார்கழி மாத நிறைவு பூஜையையொட்டி அருள்மிகு அங்காளம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.