மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே செண்பகச்சேரி மகாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்
By : King 24x7 Angel
Update: 2024-02-08 07:31 GMT
மயிலாடுதுறை அருகே உள்ள செண்பகச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப்பணி நிறைவுற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா கடந்த 5-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையின் நிறைவில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து விமான குப்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும் கிராமர் கோயில்களான செல்வகணபதி மற்றும் மன்மதீஸ்வரர் கோயில்களிலும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.