திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்க தீர்த்தகுடம் முளைப்பாரி யுடன் முத்துப் பல்லக்கு ஊர்வலம் நடந்தது.

Update: 2024-01-19 04:05 GMT
கும்பாபிஷேக விழா
திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பஞ்ச வாத்தியங்கள் முழங்க தீர்த்த குடம், முளைப்பாரியுடன் முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. திருப்பூர் - தாராபுரம் சாலையில், மிகவும் பழமை வாயந்த, புகழ் பெற்ற ஶ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலின் கும்பாபிசேக விழாவானது வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. கும்பாபிசேக நிகழ்ச்சிகளானது இன்று ஶ்ரீ கணபதி பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து திருப்பூர் காவலர் குடியிருப்பு மாரியம்மன் கோயிலிலிருந்து பட்டினபிரவேசத்தை தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, முளைப்பாரியுடன், புனித கலச தீர்த்த குடங்களுடன் பக்தர்களுடன் நகர்வலமாக அம்மனின் முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. குமரன் சாலை, அரிசிகடை வீதி, டூம்லைட் மைதானம் வழியாக முத்துப்பல்லக்கு கோவிலை சென்றடைந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News