சந்தை மதிப்பு வழிகாட்டு மதிப்பு சீரமைப்பு - ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்
சந்தை மதிப்பு வழிகாட்டு மதிப்பு சீரமைப்பு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
சந்தை மதிப்பு வழிகாட்டு மதிப்பினை சீரமைப்பது தொடர்பாக, இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47 AA - கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தி அமைத்தலுக்கான மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010 விதிகளில் விதி 4 (2) -ன்படி மைய மதிப்பீட்டு குழு 26-04-2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க, கரூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் விபரங்களை www.threginet.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக் குழுவிடம், நேரிலோ அல்லது தபால் மூலமாக அளித்திட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.