திருமண மண்டபம், அச்சக உரிமையாளர்களுடன் தேர்தல் விதிகள் கூட்டம் 

மக்களவை தேர்தலையொட்டி திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்களுடான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-03-18 08:16 GMT
திருமண மண்டடம், அச்சக உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்களுடான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நடைபெற்றது.    

இக்கூட்டத்தில்  மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளின் உரிமையாளர்களும் தேர்தல் அறிவிப்பு வரப்பெற்று, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை      திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினர் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சியினர் சமுதாய விருந்து போன்றவற்றிற்கு அனுமதி வழங்க கூடாது.

Advertisement

அவ்வாறு அரசியல் கட்சியினர் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரினால் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்று உள்ளனரா என்பதை சரிபார்த்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். அரசியல் கட்சி தொடர்புடைய நிகழ்ச்சி எனத் தெரிய வந்தால்  தேர்தல் பறக்கும்படை மற்றம் உதவி தேர்தல் நடத்தும் அலுவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.   

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News