தியாகி ராமையா பிறந்தநாள் விழா!
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான காட்டுப்பட்டி வி ராமையாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
Update: 2024-06-02 06:43 GMT
நாட்டின் விடுதலைப் போராட்டத் தியாகியும், முன்னாள் அமைச்சருமான மறைந்த காட்டுப்பட்டி வி ராமையாவின் 104- ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவியநாதன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் பெனட் அந்தோனிராஜ், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இப்றாகிம்பாபு, செயற்குழு உறுப்பினர் ஜி.எஸ். தனபதி, நகரத் தலைவர் மதன் கண்ணன்,வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் காட்டுப்பட்டி ராமையாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பொன்னமராவதி காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் இராமையா உருவப்படத்துக்கு, காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். எஸ்பி.ராஜேந்திரன், ச.சோலையப்பன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.