நடைக்காவு ஊராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் தர்ணா

நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்த கழிப்பிடங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2024-02-16 06:05 GMT

 நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்த கழிப்பிடங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.  

குமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்த கழிவறைகளை இடித்து அகற்றி கழிவறை இல்லாத அலுவலக மாற்றியதை கண்டித்தும், ஊராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை  கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.  

     நடைக்கவு சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா பாய் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், அடைக்காகுழி  வட்டார செயலாளர் ரெஜி, வட்டார குழு உறுப்பினர்கள் சுனில் குமார், ஜஸ்டின்ராஜ், தீபா ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் செல்வசுவாமி போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Tags:    

Similar News