மார்க்சிஸ்ட் கட்சி பயிற்சி வகுப்பு

குறிஞ்சிப்பாடி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Update: 2024-06-07 16:26 GMT

பயிற்சி வகுப்பு 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் அமர்வு 2 மாவட்ட குழு உறுப்பினர் ஆர் கே சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி திட்டம் குறித்து கட்சியின் மாநில கல்வி குழு உறுப்பினர் ஜி ஆனந்தன் பேசினர்.

மாநிலக் குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி ஆகியோர் ஒன்றிய குழு முடிவுகளை விளக்கிப் பேசினர். மாவட்ட குழு உறுப்பினர் ஆர் சிவகாமி, ஒன்றிய உறுப்பினர்கள் வி கிருஷ்ணமூர்த்தி, ஆர் இளங்கோவன் வி மணிவண்ணன், எஸ் ஆர் ராஜேஷ் எஸ் கதிர்வேல் மற்றும் கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் 80 க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News