ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழா துவங்கியது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு மகா பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2024-02-15 08:07 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக மகா பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

அதிகாலையில் ராம்கோ குரூப் சேர்மனும், கோவில் பரம்பரை அறங்காவலருமான பி.ஆர். வெங்கட்ராம ராஜா, மற்றும் நிர்மலா ஆகியோர் முன்னிலையில் விழா துவங்கியது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிறப்பு தீபாராதனையுடன் பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

10 தினங்கள் நடைபெறும் விழாவில் ஏழாம் நாள் திருவிழாவில் திருக்கல்யாணமும், எட்டாம் நாள் விழாவில் தெப்ப உற்சவமும், ஒன்பதாவது நாள் திருவிழாவில் தேர் திருவிழாவும் நடைபெறவுள்ள நிலையில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News