திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி

திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி. பஞ்ச மூர்த்திகள் விக்ரமன் ஆற்றில் கரையில் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-25 12:02 GMT

திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம். சிறப்புமிக்க இக்கோவிலின் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சோமாஸ்கந்தர் அம்மன திருஆபரணங்கள் அணிந்து பள்ளக்கில் வெள்ளி ரிஷப வாகனத்தில்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலாவாக விக்ரமன் ஆற்றின் கரை வந்தடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News