சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் விழா
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் நிகழ்ச்சி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
Update: 2024-02-17 07:28 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும், 60 அடி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள் அதற்கு முன்னதாக நேற்று கோவிலில் பூச்சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், பரம்பரை தர்மகர்த்தா சாந்தி முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று நிகழ்ச்சி தொடங்கியது ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து பூச்சாற்றுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.