திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்
சங்ககிரி: அரசிராமணி பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்.;
Update: 2024-03-12 09:58 GMT
மனித சங்கிலி போராட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி அலுவலகம் முன்பு போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அதிமுக சார்பில் நகர செயலாளர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது . இதில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திமுக அரசுக்கு எதிரான பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக நிர்வாகி முருகன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள்,தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.