பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெறலாம்: கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.;
Update: 2024-06-06 16:04 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2002-2007 வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பித்து, வைப்புத் தொகை பெற்று தற்போது 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு உடனடியாக முதிர்வு தொகையை பெற்றிடும் பொருட்டு பயனாளிகள் தங்களின் வங்கி கணக்கு புத்தகம், மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் வைப்புத் தொகை ரசீது ஆகியவற்றின் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் கார்டு நகலுடன், அந்ததந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களை அணுகி பயன் பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.