தண்டுமரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்

தண்டுமரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-04-27 10:41 GMT

மாவிளக்கு பூஜை

 தண்டுமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவிளக்கு ஊர்வலத்தில் தீபஒளியேற்றி மாவிளக்கு எடுத்து வ்நதனர். ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் விழாவையொட்டி கோவில் முன் கம்பம் நடப்பட்டு 15 நாள்களாக தினந்தோறும் வழிபாடுகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை குண்டம் இறங்கும் விழாவும் வியாழக்கிழமை காலை அரண்மனை பொங்கல் விழாவும் நடைபெற்றது. விழாவையொட்டி தண்டுமாரியம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

விழா நிறைவாக கொமராபாளையம் கிராமமக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இரவு நேர மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு தட்டில் தீபஒளி ஏற்றி ஊர்வலமாக கோவிலுக்கு சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இளம்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஒட்டுமொத்த கிராமமக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக ஆடி மகிழ்ந்தனர்.

விழா நிறைவாக கம்பம் பிடுங்கும் விழாவில் வானவேடிக்கையுடன் கம்பம் பிடுங்கப்பட்டு பவானிஆற்றில் விடப்பட்டது. பெண்கள் ஆரவாரத்துடன் கொண்டு வந்த இந்த தீபஒளி மாவிளக்கு அனைத்து இன ஊர்பெரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர் என்பது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது

Tags:    

Similar News