அங்காளபரமேஸ்வரி கோயிலில் மயான கொல்லை

கீழ்வேளூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவ விழாவையொட்டி மயான கொல்லை நடைபெற்றது.

Update: 2024-03-12 01:51 GMT
மயான கொல்லை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அங் காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத் திரி உற்சவ விழா கடந்த 8ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடக்கியது. மதியம் பூர்னாஹீதியும், மகா அபிஷேகமும் நடை பெற்றது. பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா காட்சி யும் நடைபெற்றது. 9ம் தேதி கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் இருந்து பால் குட ஊர்வலம் நடைபெற்று அம்மனுக்கு பால் அபிஷே கம் நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது.

நேற்று முந்தினம் 10ம் தேதி இரவு பூங்கரகம் எடுத்து வருதல் நிகழ்கி நடைபெற்றது. நேற்று இரவு மயான கொல்லை நிகழ்ச்சி நடை பெற்றது. கோயில் இருந்து சிவன், காளி, பெரியாச்சி,காட்டேரி, மயிராசுரன், வீரன், கருப்பு சாமி ஆகிய வேடம் அணித்து கச்சனம் சாலை வழியாக கீழ்வேளூர் சுடுகாடு சென்றடைந்தது அங்கு மயான கொல்லை நடைபெற்றது. மயானத்தில் சிறப்பு படையல் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அங்காளபர மேஷ்வரி அம்மன் ஆலய அரக்கட்டளை நிர்வாகிகள், கிராம வாசிகள், உபயதார்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News