மயிலாடுதுறை : வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Update: 2024-03-31 03:45 GMT

ஆய்வு 

. மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் காப்பறை வசதிகளை தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹீராஜ் ஹச் பகதே, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி, வேட்பு மனுவை திரும்பப் பெற நேற்று  கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வேட்பாளரும் வேட்பு மனுவைத் திரும்பப் பெறாததால், இந்த தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, தேர்தலில் இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எடுத்துச்செல்லப்பட்ட ரூ.29.57 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News