குத்தாலம் தேவாரப் பாடல் பெற்ற காளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சமயக்குரவர்கள் நால்வராலும் பாடபெற்ற பழமை வாய்ந்த ஓம்காளீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2023-10-27 16:31 GMT

ஓம்காளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயகுரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் கோயில் உள்ளது. காளிதேவி குத்தாலத்தில் சிவனை வேண்டி கோயில் அமைத்து நீண்ட காலம்  வழிபாடு நடத்தியதன் பலனாக,   சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக புராணவரலாறு கூறுகிறது.   

கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையடன் தொடங்கி ஆறு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று,புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News