மயிலாடுதுறை : வெயிலின் தாக்கத்தை குறைத்த லேசான மழை
மயிலாடுதுறை பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Update: 2024-05-14 05:18 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக வெயில் கடுமையாக பொதுமக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதிய நேரத்தில் சிறுவர்கள், முதியவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் லேசானமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இன்று காலை முதல் மயிலாடுதுறையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. காலை 10 மணி அளவில் மயிலாடுதுறை நகர் பகுதிகளில் சுமார் 15 நிமிடங்கள் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.