யானை, யாழி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் யானை, யாளி வாகனங்களிலும் ,வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி சோடச தீபாரதனை செய்யப்பட்டு பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
6 ஆம் திருநாளான நேற்று ஶ்ரீமாயூரநாதர் யானை வாகனத்திலும், ஶ்ரீ அபயாம்பிகை அம்மமன் யாழி வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், விநாயகர் சண்டிகேஸ்வரர் மின்னோளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து பஞ்சமுக தீபாரதனை, 16 வகையான சோடச தீபாரதனை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் பங்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. மேளதாள வாத்தியங்கள் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற பஞ்சமூர்திகளின் வீதியலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.